11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
இதுதொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு வினாக்களில் மாற்றங்கள் அமலாகின்றன. இதுவரை Source Based மற்றும் Case Based பிரிவில் கேட்கப்படும் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் 40 சதவீதம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இது 50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
வினாத்தாளில் மாற்றம்
குறுகிய வினாக்கள், நீண்ட வினாக்கள் ஆகியவை 40 சதவீதம் கேட்கப்பட்டு வந்தன. இது 30 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுவே 20 சதவீதம் கேட்கப்படும் Select response வகையிலான MCQ வினாக்களில் எந்தவித மாற்றமும் இல்லை. 9, 10 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை.
9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
வழக்கம் போல் Case Based மற்றும் Source Based பிரிவில் MCQ கேள்விகள் 50 சதவீதம், Select Response பிரிவில் MCQ கேள்விகள் 20 சதவீதம், குறுகிய வினாக்கள் அல்லது நீண்ட வினாக்கள் 30 சதவீதம் ஆகியவை அப்படியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி பள்ளிகளில் திறன்களை வளர்க்கும் வகையிலான கல்வியை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.<புதிய கல்விக் கொள்கை
மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்யும் வகையில் பாடங்கள் இருக்காது. சிந்தனை திறன்களை தூண்டுதல், சிக்கலான நேரங்களில் சமயோசித முடிவுகளை எடுக்கும் திறன்கள் என 21ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வி முறை இருக்கும்.
குறிப்பாக Competency Based Questions எனப்படும் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment