தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ல் தொடங்கிஏப்ரல் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 9.1லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இன்று (ஏப்.12) முதல் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகள் இன்றுதொடங்கி ஏப்.22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம்உள்ளிட்ட செயல்பாடுகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல்வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment