1 - 5ஆம் வகுப்பு கோடை விடுமுறை & ஆசிரியர்களது பணி குறித்த செய்தி - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/04/2024

1 - 5ஆம் வகுப்பு கோடை விடுமுறை & ஆசிரியர்களது பணி குறித்த செய்தி

 ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது. ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.

       நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.

      அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.

     மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் செல்லுதல் வேண்டும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

              ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.

    தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி ,  promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பண ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


one time connectivity charge இந்த நிதியில் இருந்து  மேற்கொள்ளலாம் அதோடு நாம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

      

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron  நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் ,கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


- பள்ளிக் கல்வித்துறை தகவல்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459