பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் 21.3.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: அரசியல்.
அதிகாரம்: இறைமாட்சி.
குறள்:381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
விளக்கம்:
போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.
Reason rules the world
அறிவே உலகை ஆள்கிறது
இரண்டொழுக்க பண்புகள் :
1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்
பொன்மொழி :
உடல் உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போலவே, சோதனைகளும் மனதைப் பலப்படுத்துகின்றன. --செனிக்கா
பொது அறிவு :
1. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?
2. தமிழ் மகள் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஔவையார்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
காசினி கீரை: பித்தப்பை கோளாறு, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கல் பிரச்னை போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் காசினிக் கீரை பொடியை காலைநேரத்தில் குடித்துவந்தால், நீரிழிவு கட்டுப்படும்
மார்ச் 21
பன்னாட்டு வன நாள் (International Day of Forests)
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.
எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.
நீதிக்கதை
ஆறு பேர் நண்பர்கள் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவினைக் காண இரவில் வழிநடந்து சென்றார்கள். செல்லும் வழியில் பெரிய ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந்தது. அவர்களில் ஒருவன் இரவில் ஆறு தூங்கும் என்று சொல்வார்கள்; ஆறு, தூங்குதா? விழித்திருக்கிறதா? என்று பார்த்து இறங்கவேண்டும் என்றான். மற்றவர்களும் அதுவே சரி என்றார்கள். சோதனை பார்ப்பதற்காக, வழிப்போக்கர்கள் சமைத்துக் கரையில் போட்டுப்போன கொள்ளிக் கட்டையை எடுத்து ஆற்றில் நனைத்தார்கள். நனைத்ததும் "சுரீர்” என்ற சத்தம் கேட்டது . ஆறு விழித்துக்கொண்டிருக்கிறது. "போகலாம்" என்று ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அறுவரும் மறுகரையை அடைந்தனர்
அடைந்து சரியாய் வந்து சேர்ந்தோமா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும் என்று ஒருவன் சொன்னான். அவ்விதம் ஒவ்வொருவரும் தன்னை விட்டு எண்ண ஐந்துபேர்கள் வந்தோம். "ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது" என்று பொழுது விடியுமளவும் புலம்பிக்கொண்டே இருந்தார்கள். அவ்வழியே ஒரு வழிப்போக்கன் வந்தான். ஏன் அழுகிறீர்கள்? என்றான். அப்போது அவர்கள் நாங்கள், "ஊரில் இருந்து அறுவர் வந்தோம். ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது. ஐந்து பேர் இருகிறோம். ஒருவரை இழந்தோமே” என்று அழுகிறோம்'' என்றார்கள். வழிப்போக்கன் பார்த்து, "இவர்கள் தனக்கும் பிறர்க்கும் உதவி இல்லாமல் இருக்கும் உவர் நிலத்திற்கு ஒப்பாவர் என நினைத்தார்.ஒவ்வொருவரையும் தனி தனியாக நிற்க வைத்து அனைவரும் இருப்பதை கூறினார்.பிறகு அவர்கள்
காணாத ஒருவனை கண்டறிந்து கொடுத்த அவனை வணங்கினார்கள். அவன் நீங்கள் சென்று கல்வி கற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பின் வெளியூர் செல்லலாம் என்று ஊர் செல்லச் செய்தான். வள்ளுவரும், கல்லாதவர், உலகில் எண்ணப்படும் மக்கள் கணக்கினைப் பெருக்க வாழ்கிறார்கள். உதவிTEACHERS NEWS
செய்யாத உவர் நிலத்திற்கு ஒப்பாக இவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment