பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் தலைமை ஆசிரியர்களுக்கான (31-40 தொகுதி) பயிற்சி முகாம், இன்று (மார்ச் 18) தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதி வரை மதுரையில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது
No comments:
Post a Comment