ஆசிரியை சஸ்பெண்ட்: பழனிசாமி கண்டனம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/03/2024

ஆசிரியை சஸ்பெண்ட்: பழனிசாமி கண்டனம்

 ஆசிரியை உமா மகேஸ்வரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதலே, ஆசிரியர்களுக்கு அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

 இந்நிலையில், ஆசிரியை உமாமகேஸ்வரி, கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்து உள்ளார்.கல்வித்துறையில், 15,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன; 1,200க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்புகளுக்கு, 3,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் குறித்த அறிவிப்பு இருந்தால் நன்றாக இருக்கும். இல்லந்தோறும் கல்வி திட்டத்திற்கு, பல நுாறு கோடி ரூபாய் வீணாக செலவழிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக, அவரை தி.மு.க., அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.தமிழக கல்விப்பணி சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் கருத்து கூறினால், அதை ஆய்ந்து, சீர்செய்வதை விட்டு விட்டு, கருத்து கூறியவரை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது. 

ஆசிரியை உமாமகேஸ்வரிக்கு, உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459