தேர்தல் பணியில் ஈடுபடும் பள்ளி ஆசிரி யர்களுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறும் நிலையில், ஆசிரியர் இல்லாத பள்ளிகளை இல்லம் தேடி, கல்வி திட்ட தன் னார்வலர்களைக் கொண்டு நடத்த கல்வித்துறை அறிவுறுத் தியுள்ளது.
தேர்தல் பணியில் ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத் தப்படுவது வழக்கமானது. பள் ளிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் விடுமுறை நாள்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப் படும்.
தமிழகத்தில் இந்த முதல் கட்டப் பயிற்சியானது பெரும்பாலான மாவட்டங் களில் மார்ச் 24 ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. ஆனால், நாகை மாவட்டத் தில் இந்த பயிற்சி புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்காமல் பள்ளி ஆசிரியர் கள் பயிற்சியில் பங்கே பங்கேற்கவும், பயிற்சிக்கு செல்வதால் ஆசிரி யர்களுக்கு பதில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்க ளைக் கொண்டு பள்ளிகளை நடத்தவும் கல்வித்துறை சார் பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பெற்றோர், ஆசிரியர்களி டையே அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் மட்டும் 62 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 124தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், விலக்களிக்கப் பட்ட ஆசிரியர்களைத் தவிர நூறு சதவீத ஆசிரியர்களும் தேர்தல் பணியில் சேர்க்கப்பட் டுள்ளனர். இந்த நிலையில் பள் ளிகளை நடத்தினால், பொறுப்பான ஆசிரியர்கள் இல்லாத சூழல் உருவாகிறது.
மேலும் இல்லம் தேடி கல் வித்திட்ட பணியாளர்கள் அர சுப் பள்ளிகளில் மட்டுமே உள் ளனர். 62 அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்கள் இல்லை. இதனால் பெரும்பா லான அரசு உதவி பெறும் பள் ளிகளுக்கு அந்தந்த பள்ளி நிர் வாகம் புதன்கிழமை விடுமுறை அளித்துள்ளது.
ஏப்ரல் 2 முதல் தேர்வு நடை பெறவுள்ள நிலையில், எழுந் துள்ள இந்த பிரச்னை சமூகர்வ லர்களிடையே குழப்பத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே விடு முறை நாள்களில் பயிற்சி வகுப் புகளை நடத்த வேண்டும் அல் லது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு பயிற்சி வகுப் புகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
TEACHERS NEWS |
இதுகுறித்து கூட்டணி மாநிலத் தலைவர் மு. லட்சுமி நாராயணன் வெளியிட்ட செய்தி:
நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் 100 சதவீத ஆசி ரியர்களுக்கும், சில பள்ளிகளில் 90 சதவீத ஆசிரியர்களுக்கும் புதன் கிழமை (மார்ச் 27) தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. பள்ளி களுக்கு விடுமுறை அளிக்காமல், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்க ளைக் கொண்டு பள்ளி நடத்த வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவ லர் உத்தரவிட்டதாக, வட்டார கல்வி அலுவலர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மாணவர்களை சமாளிப்பது என் பது மிகவும் கடினமானது.
மாணவர்களின் பாதுகாப்புக்கும் எந்த வித மான உத்தரவாதம் இல்லாத நிலையில், பள்ளி நடத்துவது சாத்தியமற் றது. எனவே பயிற்சி நடைபெறும் நாள்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment