டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு முடிவு களை அண்ணா பல்கலைக்கழ கம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ் நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம் ஆர்க் ஆகிய முதுநிலை பொறியி யல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவ சியமாகும். இந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அதன்படி, 2024-ஆம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு கடந்த மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், எம்பிஏ தேர்வை 22,849 பேரும், எம்சிஏ தேர்வை 8,642 பேரும் எழுதினர்.
தொடர்ந்து சீட்டா தேர்வு மார்ச் 10-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை 4,648 மாணவர்கள் எழு தினர்.
இந்நிலையில் டான்செட் மற் றும் சீட்டா தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்க லைக்கழகம் வெளியிட்டது . வியாழக்கிழமை
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை https://tancet.ann auniv.edu/tancet என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து, டான்செட் மதிப் பெண் பட்டியலை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து ஏப்ரல் 3 முதல் மே 3-ஆம் தேதிக்குள் மாணவர்கள் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.
அதில் ஏதேனும் சந்தேகம் அல்லது திருத்தங்கள் இருப்பின் tanceeta@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று பல்கலைக்கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment