சென்னை: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 18 விடுதிகள், மாணவிகளுக்கு 11 விடுதிகள் என 29 விடுதிகள் செயல்படுகின்றனர். இவற்றில் 1438 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். அதே போல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் விடுதி 20, மாணவிகள் விடுதி 13, கல்லுாரி மாணவர் விடுதி 2, மாணவியர் விடுதி 3 என 38 விடுதிகள் செயல்படுகின்றன.
இவற்றில் மாணவர்கள் 956, மாணவிகள் 877 பேர் என 1833 பேர் தங்கி படிக்கின்றனர்.அரசு விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, தட்டு, டம்ளர், 10ம் வகுப்பு,பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு கையெடுகள் என அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் பல விடுதிகளில் சேரும் மாணவர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். எப்போதாவது வந்து வருகை பதிவு செய்து செல்கின்றனர். ஒரு சிலர் பகலில் விடுதிக்கு வந்து விட்டு இரவில் வீடுகளுக்கு சென்று விடுவதாக புகார்கள் எழுந்தன. இதே போல் பணியாளர்களும் முறையாக பணிக்கு வருவது இல்லை என்றும், இதுபோன்ற நடவடிக்கையால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2024-2025 ம் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரம், கண்காணிப்பு கேமரா செயல்பாட்டிற்கு வருகிறது. இதற்காக விடுதிகளில் மிஷின்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் மாணவர்கள், விடுதி காப்பாளர்கள், உதவியாளர்கள் தினமும் காலை, மாலையில் வருகை பதிவு அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், அரசு மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
TEACHERS NEWS |
இதில் விடுதியில் உள்ள அனைவரும் வருகை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள், கண்காணிப்பாளர்கள் வருகை உறுதி செய்ய இயலும் என்றனர்.
No comments:
Post a Comment