மொழிவழி சிறுபான்மை மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத ஓராண்டுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




13/03/2024

மொழிவழி சிறுபான்மை மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத ஓராண்டுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு

 1214527

தமிழ்மொழி அல்லாத மொழிவழி சிறுபான்மையின மாணவர்கள் கட்டாய தமிழ்மொழி பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை: கடந்த 2006-07-ம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், இச்சட்டப்படி, 2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பகுதி -1 ல் தமிழ் மொழிப்பாடத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.


இந்த சூழலில், மொழி வழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று, வரும் ஏப்ரல் மாதம் தேர்வு எழுத உள்ள தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் விலக்குகோரி விண்ணப்பித்தால், அவரர்களின் சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தில் தேர்வெழுத அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459