இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.EDCIL/SRILANKA TEACHER TRAINING/Nov/2023/01
பணி: Teacher Trainer
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.1,25,000
வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கிலம், கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியராக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரரின் தகுதி, பணி அனுபவம் அகியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 மாதம் பணி வழங்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
வரும் ஜூலை மாதம் முதல் பணியில் சேர வேண்டும்.
பணிபுரிய வேண்டிய இடங்கள்:
கண்டி, மாத்தளை, நுவரெலியா
இரத்தினபுரி, கேகாலை, பதுளை
விண்ணப்பிக்கும் முறை: www.edcilteacherrecruitment.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2024
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment