பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள்:365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
விளக்கம்:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
TEACHERS NEWS |
No smoke with out fire
நெருப்பில்லாமல் புகையாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது. --கலீல் ஜிப்ரான்
பொது அறிவு :
1. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?
2.உலகின் பெரிய ரயில்நிலையம் எது?
நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்)
English words & meanings :
Hysterical (adj) - affected by wildly uncontrolled emotion கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சியால் பாதிக்கப்படுதல்
ஆரோக்ய வாழ்வு :
கொடி பசலை கீரை: கொடி பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
நீதிக்கதை
கற்றது எவ்வளவு?
பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிற கங்கை நதியில் ஒரு படகில் ஓடக்காரனும் சில பயணிகளும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளுள், பண்டிதர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் தான் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்ற கர்வம் அதிகம் தோன்ற அதில் பயணித்தார். அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார்.
"ஏய் ஓடக்காரா, இப்படி ஒன்றும் தெரியாமல் நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா?' ' என்று ஏளனமாக கேட்டார். "ஐயா,சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?" என்றான் ஓடக்காரன் அடக்கமாக.''ஓஹோ! அப்படியா? அப்படியானால் உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாகிப் போச்சே" என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார்.
"சரி ! அது போகட்டும்! இந்த உலகம் போற்றும் ஒண்ணே முக்கால் அடி திருக்குறளையாவது நீ படித்திருக்கிறாயா?" எனக் கேட்டார்.
அதற்கு ஓடக்காரன் "அதை நான் தொட்டது கூட கிடையாதே,சாமி" என்று வெட்கத்துடன் சொன்னான்.
"தண்டமே ! தண்டமே! இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே!, அது போகட்டும்
பாகவதமாவது வாசித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.
சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான்.
"போச்சு! அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில் முக்கால்வாசி நஷ்டமாகி விட்டதே!. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என்று பண்டிதர் தன் வருத்தத்தைச் சொல்லி முடித்தார்.
அப்பொழுது கரை புரளும் வெள்ளம் வந்தது. அலை ஒன்றோடொன்று மோதி படகு கவிழ்ந்து விடும் என்ற நிலை தெரிந்தது. நீந்தத் தெரிந்தவர்கள் யாவரும் நதியில் வேகமாகக் குதித்து நீந்திக் கரையேறினார்கள்.
ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். “சாமி! தண்ணீரில் குதிங்க சாமி. இல்லேன்னா படகு கவிழ்ந்து மூழ்கிடுவீங்க." என்று ஓடக்காரன் எச்சரித்தான். "ஐயோ! என்னப்பா சொல்கிறாய்?, எனக்கு நீச்சல் தெரியாதே அப்பா!" என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், "சாமி. எனக்குக் கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவுமே தெரியாது. ஆனால் நீச்சல் நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப் போறீங்களே! மிகவும் வருத்தமா இருக்கு" என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.
எல்லாம் அறிந்தவர் என்பது உலகில் இல்லை. "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு".
இன்றைய செய்திகள்
TEACHERS NEWS |
No comments:
Post a Comment