பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 16.02.2024
திருக்குறள்
பால் : அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்
குறள்:358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்:
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
பழமொழி :
New brooms sweep clean
புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.
2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
பொன்மொழி :
ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே. --மார்டின் லூதர் கிங்
பொது அறிவு :
1. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?
விடை: இறால்
2. மீன்கள் இல்லாத ஆறு?
விடை: ஜோர்டான் ஆறு
English words & meanings :
backdrop (v)-the background to a situation, பின்னணி. baize(n) - a thick woollen cloth, தடித்த கம்பளித்துணி
ஆரோக்ய வாழ்வு :
பசலை கீரை : பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
பிப்ரவரி 16 இன்று
தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்
தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது
நீதிக்கதை
குதிரையிடம் பேசினார்...!
இராமலிங்க வள்ளலார், ஜமீன்தார் ஒருவரின் இல்லத்தில் சொற்பொழிவு செய்வதற்காக அழைக்கப்பட்டார். அவரை அழைத்துப் போவதற்காக ஜமீன்தாரே குதிரை வண்டியில் வந்தார். வள்ளலாரும் ஏறிக் கொண்டதும் குதிரை வண்டி கிளம்பியது. குதிரை சற்று வயதான குதிரை. எனவே மெதுவாகவே ஓடியது.
"நேரமாகி விட்டது. குதிரையைத் தட்டி ஓட்டு” என்று ஜமீன்தார் கூறியதும் வண்டியோட்டி கையிலிருந்த சாட்டையினால் குதிரையின்மீது அடித்து விரட்டினான். அடித்து அடித்து குதிரை வேகமாக ஓடுமாறு செய்தான்.
ஜமீன்தார் அறியாதவாறு வள்ளலார் குதிரை படும் துன்பத்தைக் கண்டு கண்கலங்கினார். அவருடைய மனம் மிகுந்த வேதனையடைந்தது.
குதிரை மூச்சிரைக்க ஓடி ஓடி ஜமீன்தாரின் மாளிகையின் முன்பு நின்றது. ஜமீன்தார் "உள்ளே வாருங்கள்" என்று வள்ளலாரைப் பார்த்துக் கூறிவிட்டு மடமடவென்று மாளிகையினுள்ளே சென்று விட்டார். இராமலிங்க வள்ளலாரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா என்பதை கவனிக்க வேகமாக உள்ளே சென்று விட்டார். சற்று நேரம் கழிந்ததும், வள்ளலார் ஏன் உள்ளே வரவில்லை என்று எண்ணி, அவரைத் தேடி வாயிலுக்கு வந்தார்.
வாயிலில் அவரைக் காணவில்லை. எங்கே போயிருப்பார்? என்று தேடினார். வள்ளலாரின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்கும் ஆவலுடன் ஊர் மக்கள் அனைவரும் மாளிகையி னுள்ளே திரண்டிருந்தார்கள். நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஓரிரு வேலையாட்களை அனுப்பி நான்கு திசைகளிலும் தேடச் சொன்னார்.
அப்போது, வண்டியோட்டி ஜமீன்தாரிடம் வந்து "நீங்க தேடுபவர், பின்னால் வண்டி லாயத்தில் இருக்கிறார்" என்றான்
உடனே ஜமீன்தார் பரபரப்புடன் அங்கே சென்றார். வள்ளலாருக்கு வண்டி லாயத்தில் என்ன வேலை? என்று ஜமீன்தார் வியந்தார். அவருடன் வேறு பலரும் லாயத்திற்குச் சென்றார்கள்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி, நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.
"நான் பாவி. என்னால் தானே உனக்கு அடி கிடைத்தது. என்னை மன்னித்து விடு. என்னை மன்னித்து விடு" என்று கூறிய வண்ணம் குதிரையைத் தடவியபடியே வள்ளலார் கண்ணீர் சொறிந்தார். குதிரையின் அருகில் நின்றபடியே.
இக்காட்சியைக் கண்ட ஜமீன்தார் ஓடிவந்து வள்ளலாரின் கால்களில் விழுந்து வணங்கினார்.
"நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும். வாயில்லாப் பிராணியை இனி வதைக்க மாட்டேன்" என்று கண்ணீருடன் கதறினார்.
"அருட்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள."
(திருக்குறள். அருள் உடைமை)
"உயிர்களிடத்தில் இரக்கம் காட்டும் அருளாகிய செல்வமே உயர்ந்த செல்வமாகும்.
பொருள் என்கிற செல்வம் அற்பர்களிடம் கூட இருக்கும்" என்ற குறள் நீதி ஜமீன்தாரின் நினைவில் வந்தது. அந்த நீதியை அவர் உணர்ந்தார்
இன்றைய செய்திகள் - 16.02.2024
*உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: அமெரிக்கா முதலிடம்; சீனா இரண்டாமிடம்; ஜெர்மனி மூன்றாமிடம்.
*லோக்சபா தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய படை வீரர்களை ஈடுபடுத்த முடிவு.
*புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை
நெருங்கிவிட்டோம்; ரஷ்ய அதிபர் புடின் தகவல்.
*புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானிய பிஸ்கட் ' முதல் மந்திரி ரங்கசாமி அறிவிப்பு.
*இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா சதமடித்து அசத்தியுள்ளார். சாதனை பட்டியலில் இடம் பிடித்த ஜடேஜா.
Today's Headlines
*World's largest Countries of strong economy: America is number one; China is second; Germany is third.
*Lok Sabha Elections: Decided to engage 3.40 lakh Central Army soldiers in security duty.
*Vaccine for cancer is in the final stage –
TEACHERS NEWS |
*Minister Rangaswamy announces 'Chiruthaniya Biscuits' for school students in Puducherry.
*Jadeja scored a century in the first innings of the 3rd Test against England. Jadeja is on the achievement list.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment