குப்பு - சுப்பு உரையாடல் G.O. 243
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
குப்பு : அண்ணே டிட்டோஜாக் எதுக்கு போராட்டம் பன்றாங்க
சுப்பு : ஏதோ 31 கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமா
குப்பு: அண்ணே அந்த டிட்டோஜாக் ஏதோ ஒரு 243 ஆணையம் ரத்து செய்யணும்னு போராடுறாங்கன்னு கேள்விப்பட்டேனே?
சுப்பு: ஆமாப்பா அந்த கோரிக்கை ஜாக்டோ ஜியோவில் கூட ஆணையை ரத்து என வச்சுட்டாங்கப்பா இருந்தாலும் அவங்க போராடுறாங்க
குப்பு: அதான் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தான் ஜாக்டோ ஜியோ இருக்கேனே எல்லா கோரிக்கை அதிலே இருக்கண்ணே?? இவங்க எதுக்கு தனியே போராடுறாங்க அண்ணே.. அப்ப இவங்களுக்கு ஜாக்டோ ஜியோ -மேல நம்பிக்கை இல்லையா?
சுப்பு: உனக்கு தெரியுது ஆனா அவங்க எதுக்கு போராடுறாங்கன்னு எங்களுக்கே தெரியல தம்பி
குப்பு: அண்ணே ஒருவேளை யாராவது தூண்டுதலினால் போராடுறாங்களா
சுப்பு : ஏன் இப்படி சொல்ற.. அப்படியெல்லாம் இருக்காதப்பா
குப்பு: அண்ணே ஜாக்டோ ஜியோவில் சேர்ப்பதற்கு முன்னாடி தான் 243 ரத்து செய்யணும்னு போராட்டம் பண்ணாங்க ஆனா அதையும் ஜாக்டோ ஜியோவில் சேர்த்துட்டாங்க..போராடுவதற்காக ஜாக்டோ ஜியோ இருக்குது அதை விட்டிட்டு ஜாக்டோ ஜியோ கோரிக்கை எல்லாம் வச்சு இங்க தனியா ஒரு அமைப்பா போராடுறாங்களே என்ன காரணம் இருக்கும்
சுப்பு: அதுதான் பா எனக்கும் தெரியல நானும் மண்டைய போட்டு உருட்டிட்டு இருக்கேன்
குப்பு: அண்ணே இது ஜாக்டோ ஜியோக்கு எதிர செயல்பட கூடியதாக இருக்குமோ என நினைக்கிறேன்
சுப்பு: எப்படி சொல்ற தம்பி அவங்களும் ஜாக்டோ ஜியோ இருக்காங்களே
குப்பு: அப்போ ஜாக்டோ ஜியோவில் ஒருமித்த கருத்தோடு முதலமைச்சர் நான் செய்யாமல் யார் செய்யப்போறா? என கூறி விரைவில் உங்கள் கோரிக்கை எல்லாம் நான் படிப்படியாக செய்து தரேன் என்று கூறியதால் ஒருமித்த கருத்தோடு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து. அதனால ஜாக்டோ ஜியோ போராட்டத் தற்காலிகமாக நிறுத்தி புடிச்சி அப்படி இருந்து இங்க போராடறாங்களே அண்ணே அப்போ இவங்க ஜாக்டோ ஜியோ எடுத்த முடிவுக்கு கட்டுப்படல என்று தானே அர்த்தம்
சுப்பு: நீ சொல்றதும் சரியா தான். ஆம்ப்பா இப்பதான் யோசிக்கிறேன் தம்பி. ஒன்றும் புரியல எதுக்கும் நம்ம பொறுத்திருந்து பார்ப்போமே
குப்பு: அண்ணே ஒரு சந்தேகம் தான் எனக்கு.. ஒண்ணுமே புரியல அண்ணா
சுப்பு: மறுபடியுமா? சொல்லுப்பா முடிஞ்சா உன் சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன்
குப்பு: அண்ணே அந்த 243 ரத்து என இவங்க போராடராங்க என சொன்னிங்களே.. அவங்க அமைப்புல பட்டதாரியாக இருப்பாங்க தானே? அப்படி இருக்கும்போது இவங்க போராடுவது இந்த பட்டதாரிக்கு எதிரான போராட்டம் தானே?
சுப்பு: சரி தம்பா நீ சொல்றது. அவங்க அமைப்பில் பட்டதாரி ஆசிரியர்களும் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா அவங்க என்ன சொல்றாங்கன்னா எங்களுக்கு இடைநிலை ஆசிரியர் தான் முக்கியம் பட்டதாரி பற்றி கவலை இல்லை அவங்க சொற்ப அளவுல தான் இருக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க
குப்பு: அது எப்படி என்ன ஒரு அமைப்புல வெண்னை ஒரு கண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் வைக்கமுடிமா அண்ணே??
சுப்பு: நீ கூறுவது சரிதாம்பா? உனக்கு தெரியுது நீ புத்தி சாலி புரிஞ்சிகிட்ட மற்றவருக்கு புரியலையே?
குப்பு: ஒரு அமைப்பு ன்னா எல்லாரையும் தானே பாக்கணும் அப்போ பட்டதாரி ஆசிரியர் எப்படி போனாலும் பரவால்ல என நினைக்கிறாங்க போல
சுப்பு: ஆமப்பா அப்படித்தான் போய்கிட்டு இருக்குது அந்த டிட்டோ ஜாக்ல உள்ள அமைப்புகள்ல பட்டதாரி ஆசிரியர்கள் இருக்காங்க ஆனா அவங்களுக்கு புரியலைப்பா போக போக புரிஞ்சிப்பாங்க அத விடு நமக்கு என்னத்துக்கு
குப்பு: அண்ணே நீங்க சொல்றது வாஸ்தவம் தானே ஆனா ஒரு சங்க தலைமை தன் அமைப்புல இருக்கக்கூடிய அனைத்து ஆசிரியர்களையும் காக்க வேண்டிய கடமையில் இருக்குன்ன? அந்த கடமையை அவங்க தவறுகிறார்கள் பாருங்க இந்த TAMS அமைப்பு பாருங்க இடைநிலை ஆசிரியருக்காக திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொண்டு அதுல வெற்றியும் பெறுவாங்க போல இருக்கு அண்ணே? ஏன் வெற்றியை பெற்றுட்டாங்கன்னு சொல்லலாமே
சுப்பு: அப்படியா பரவாயில்லையே அனைத்து வகை ஆசிரியர்கள் பாதிக்க கூடாது என
TEACHERS NEWS |
குப்பு: அனைத்து ஆசிரியர்களுக்கு பாதிப்பு உண்டாக்கக் கூடாதுன்னு TAMS நினைக்கிறாங்க அது தானே சரியான சங்கத் தலைமை. இது மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்கிறது. என்னமோ போகட்டம் விடு தம்பி போக போக புரியும்
சுப்பு: எந்த ஒரு வகை ஆசிரியர்களும் பாதிக்கப்படக்கூடாது என்று நடுநிலையோடு செயல்படுகிறது.
வேற எந்த சங்கமும் திருத்தும் கொண்டு வரணும்னு சொன்னது இல்ல உண்மைதானே அண்ணே
குப்பு: உனக்கு புரிச்சிருச்சி சரி தம்பி..எனக்கும் நிறைய வேலை இருக்கு தம்பி. அவங்க திட்டம் நிறைவேறாது. பொருத்திருந்து பார்போம்.
சுப்பு: சரிங்க அண்ணே நானும் வரேன் எனக்கு நிறைய வேலை இருக்கு. நன்றி அண்ணே
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
No comments:
Post a Comment