திருவள்ளூர் கலெக்டர்
த. பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் கலெக்டர் தலைமையில், பூந்தமல்லி, பாரிவாக்கத்தில் கடந்த, நவ., 22ல், மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. இந்த முகாமில், பூந்தமல்லி பாணவேடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த, எம்.எஸ்.சி., பட்டதாரி மாற்றுத்திறனாளியான, அனுசியா, 38, என்பவர் வேலை கோரி, மனு அளித்தார்.மனு, பரிசீலனை செய்யப்பட்டு, அவருக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக, பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு சிறப்பு பள்ளியில், 15,000 ரூபாய் ஊதியத்துடன் தற்காலிக ஆசிரியர் பணி ஆணை, நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment