தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறை மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான கால அட்டவணை, அண்மையில் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை, முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
மே 1 ஆம் தேதிக்குள் உபரி இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களை கணக்கீடு செய்து, மே 31 ஆம் தேதிக்குள் தேவைப்படும் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
ஜூன் 30ம் தேதிக்குள் பொது மாறுதல் கவுன்சிலிங் முடித்து, ஜூலை 1க்குள் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட மதிப்பீடு செய்ய வேண்டும்.
அப்படி காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் ஜூலை 15க்குள் அரசுக்கு தெரியப்படுத்தி, அந்த பணியிடங்களுக்கான நேரடி நியமன அறிவிப்பு, அக்டோபர் 31 க்குள் வெளியிடப்படும்.
அதன்படி ஜனவரி 31 க்குள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, ஏப்ரல் 30க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
மே 1 முதல் 31க்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிக்கப்படும் என அரசாணையில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment