ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/02/2024

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை

 

13-02-2024:
இன்றைய ஜாக்டோ ஜியோ  பேரமைப்பின்  அமைச்சர்கள் உடனான சந்திப்பு குறித்த விபரம்:

இன்று காலை 11 மணிக்கு அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்களும் தலைமைச் செயலகம் வந்தனர்.

தலைமைச் செயலக சங்க கட்டிடத்தில் அமைச்சர் அவர்களுடன் பேசும்போது வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ விவாதித்து இறுதியாக உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சங்கவாரியாக 26 பெயர்கள் சரி பார்க்கப்பட்டு அமைச்சரை பார்க்க சுமார் 12 மணி அளவில் சென்றோம்.
சுமார் ஒரு மணி நேரம் அமைச்சருடனான சந்திப்பு நடைபெற்றது அமைச்சர்கள் திரு. அன்பின் மகேஸ் பொய்யாமொழி, திரு ஏ.வ.வேலு, திரு. முத்துசாமி அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அனைத்து கோரிக்கைகளும் உறுப்பினர்கள் அனைவரது கையொப்பம் பெற்று அமைச்சர்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
கனிவுடன் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்கள் தமிழக முதல்வரிடம் இவை அனைத்தையும் எடுத்துச் சென்று தெரிவிப்பதாக கூறினர்.

 எவ்வித உத்திரவாதமும் அல்லது நடைபெற உள்ள வேலை நிறுத்தம் சார்பு அவர்கள் பேசவில்லை.


முதல்வரின் பதிலுக்காக ஜாக்டோ ஜியோ காத்திருக்கின்றது.  வேலையில் நிறுத்தம் சார்ந்து இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மீண்டும் ஜாக்டோ-ஜியோ தற்போது கூட்டம் நடைபெறுகிறது 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459