ஜாதி ரீதியாக ஆசிரியர்கள்? கணக்கெடுப்பு துவக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/02/2024

ஜாதி ரீதியாக ஆசிரியர்கள்? கணக்கெடுப்பு துவக்கம்!

 அரசு பள்ளி ஆசிரியர்கள், ஜாதி ரீதியான குழுக்களாக செயல்படுவதை தடுக்க, ஆசிரியர்களின் வசிப்பிடங்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கிஉள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே, ஜாதி ரீதியான பாகுபாடு ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆய்வு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், தமிழக அரசு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி சார்பில், பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வசிப்பிட விபரங்களை சேகரிக்கும் பணி, பள்ளிக்கல்வி சார்பில் துவங்கியுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யார்; அவர்கள் வசிப்பிடம் எங்கே உள்ளது; ஒரே ஜாதி, ஒரே பகுதியை சேர்ந்தவர்கள், ஒரே பள்ளியில் நீண்ட காலமாக பணியாற்றுகின்றனரா?அவர்கள் ஜாதி ரீதியான குழுவாக செயல்பட்டு, மற்ற ஜாதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பாகுபாடு காட்டுகின்றனரா என்ற விபரங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஜாதி பாகுபாட்டை தவிர்க்க தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க, இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459