தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/02/2024

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

 சென்னை: தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

உள்துறை சிறப்பு செயலராக இருந்த ஏ.சுகந்தி, மாநில மனிதஉரிமைகள் ஆணைய செயலராகவும், நில நிர்வாக இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உள்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி, வணிகவரித்துறை (நிர்வாகம்) இணை ஆணையராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகவும்,


தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவன செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) செயல் இயக்குநர்வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆகவும்,சென்னை வணிகவரி (நுண்ணறிவு)இணை ஆணையர் வீர் பிரதாப்சிங், ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459