'நேத்து அமைதிப்படை படம் பார்த்தேன்... மணிவண்ணன் அருமையா நடிச்சிருக்காருல்ல...'' என்ற அன்வர்பாயே, ''ஆசிரியரின் ஆட்டம் தாங்க முடியலை பா...'' என்றார்.
''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியரா இருக்கிறவர், 'சிகரம்' சதீஷ்... இவர், சட்ட சபை தேர்தலுக்கு முன்னாடியே, 'மகேஷ் ஜெயிச்சு, பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சர் ஆவார் பாருங்க'னு ஆரூடம் சொன்னாராம் பா...
''அவர் சொன்னது நடந்துட்டதால, நெகிழ்ந்து போன அமைச்சர், 'ஆசிரியர் மனசு திட்டம் ஒருங்கிணைப்பாளர்' என்ற பதவியை சதீஷுக்கு கொடுத்தாரு...இவருக்கு திருச்சி ஆசிரியர் இல்லத்தில் தனி அறையும் ஒதுக்கிட்டாங்க பா...
''தினமும் அங்க உட்கார்ந்துட்டு, ஆசிரியர்களின் பிரச்னை களை தீர்த்து வைக்கிறேன்னு பேரம் பேசுறாரு... சமீபத்துல, மதுரையில நடந்த கல்வித் துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்துல, துறை இயக்குனர்கள் கூட பேசாத நிலையில சதீஷ் மட்டும் பேசினாரு...
''அதே மாதிரி, துறையின் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களிடமும், 'அமைச்சருக்கு நெருக்கமானவன்'னு சொல்லியே, பல டீலிங்குகளை அசால்டா முடிக்கிறாருங்க...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.
No comments:
Post a Comment