தமிழக பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் செல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல், 1 முதல், அப்போதைய அ.தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. 2004ல் மத்திய பா.ஜ., அரசும், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இத்திட்டத்தை ரத்து செய்வதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது . கொரோனா கொடுந்தொற்றால் நிதிநிலை சரியில்லாமல் போனதால் தாமதமானது. தற்போது நிதி நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.
ராஜஸ்தான், உத்தரகண்ட், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே, மேற்கு வங்கம், கோவா மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் தொடர்கிறது.
அதேபோல், தமிழகத்திலும் நடப்பாண்டு பட்ஜெட்டில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment