11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/02/2024

11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு

 


IMG_20240216_102957_wm

தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.


இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459