பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான விண் ணப்பங்களை சமர்ப்பிக்க நாடு முழுவதும் 100 உதவி மையங்களை ஏஐசிடிஇ ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய நடைமுறை: 2024-27-ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும்.
இதுதவிர ஏற்கெனவே பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளுடன் இயங்கும் கல்வி நிறுவனங்கள், அனுமதிகோரி ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் பட்டியல், தொடர்பு விவரங்கள், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல் ஆகியவற்றை www.aicte.india.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கான செயல் முறையை சரியான நேரத்தில் முடிக்க வேண் டும்.
அதேநேரம் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை பெற தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇயின் திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment