அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளிகளில் பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள்.
கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு TNSED Administration App- இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . மேலும் , தொடர்ச்சியாக பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் , இப்பணியின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளவும் , அதனடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக மேற்கண்டுள்ள
செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இடிக்கப்ட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையினை பின்வரும் வழிமுறையினைப் பின்பற்றி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
To Be Demolished Buildings - Update In Tnsed App - Proceedings - Download here
No comments:
Post a Comment