பள்ளி வானவில் மன்ற கருத்தாளர்கள் பருவம் -II, III செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல் SPD செயல்முறைகள்
மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றமானது ( நடமாடும் அறிவியல் ஆய்வகம் ) நவம்பர் 28 , 2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 13210 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டு . பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் , பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித சோதனைகள் நடத்துவதற்காக அறிவியல் மற்றும் கணிதக் கருவிகளுடன் கட்டமைக்கப்பட்ட அட்டவணையின்படி பள்ளிகளுக்கு சென்று பயிற்சி அளிக்கின்றனர்.
தற்போது 710 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பருவம் II மற்றும் II- க்கான அறிவியல் மற்றும் கணிதக் கருவிகள் இணைப்பு -1 ல் வழங்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவாறு கொள்முதல் செய்து வழங்கப்பட வேண்டும் . இதற்கான நிதி மாவட்ட வாரியாக இணைப்பு -2 ல் உள்ளவாறு விடுவிக்கப்படுகிறது . மேலும் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது Tamil Nadu Transparency in Tenders Act விதிமுறைகளை பின்பற்றவும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செலவினங்கள் மேற்கொள்ளவும் , செலவினங்கள் மேற்கொண்ட பின்னர் பயன்பாட்டு சான்றிதழ் வழங்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
இணைப்பு : 1 மற்றும் II
No comments:
Post a Comment