திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
விளக்கம்:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
Little drops of water make the mighty ocean
சிறு துளி பெரு வெள்ளம்
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அது நம் சக்திற்கு அப்பாற்பட்ட விடயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதாகும். --எபிக்டெட்டஸ்
பொது அறிவு :
1.தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
2. தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?
செங்கல்பட்டு
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை: முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
ஜனவரி 09
வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. வேலைவாய்ப்பு செய்திகள் 2023
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நீதிக்கதை
புதையல் ரகசியம்
ஒரு ஊரில் ஒரு வயதான விவசாயி இருந்தார். அவரது மகன்களோ விவசாயத்தில் ஆர்வமின்றி இருந்தனர். தனக்குப் பிறகு அவர்கள் சம்பாத்தியம் இல்லாமல் துன்பப் படுவார்களே என அவர் கவலைப்பட்டார்.
அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்காக அவர் ஒரு தந்திரம் வகுத்தார். இறக்கும் தருவாயில் இருந்த போது அவர்களை அழைத்தார். வயலில் ஓரிடத்தில் தான் மிகப் பெரும் புதையலைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.
அவர் இறந்த பின்னர் அவர்கள் மண்வெட்டி, கடப்பாரைகளை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று ஆழமாகத் தோண்டினர். அவர்களுக்குப் புதையல் கிடைக்க வில்லை. ஆனால் மண் நன்கு பண்படுத்தப்பட்டதால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பணவரவு அவர்களுக்கு வந்தது.
நீதி : முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை.
இன்றைய செய்திகள்
TEACHERS NEWS |
No comments:
Post a Comment