NMMS - தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/01/2024

NMMS - தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஜன 31., வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

என்.எம்.எம்.எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் மேல்நிலை படிப்பு முடிக்கும் வரை, ஒன்பதாம் வகுப்பு முதல் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான தேர்வு பிப்., மாதம் நடக்கிறது. 

பள்ளிகளில் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன., 31ம் தேதி வரை கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459