பணிநிரந்தரம் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல். - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/01/2024

பணிநிரந்தரம் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

 தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்து அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,

12 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

பணிநிரந்தரம் நம்பிதான் 12 ஆயிரம் குடும்பங்கள் காத்துள்ளனர்.

தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உதவி தொகையை செயல்படுத்தியதை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து விடியல் தர வேண்டும்.

இது திமுக 181-வது தேர்தல் வாக்குறுதி தான்.

ஜனவரி 23 அன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் அறிவிப்பை முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளோம்.
என்றார்.

*************************
S.செந்தில்குமார் 

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell : 9487257203


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459