எங்களின் எல்லா நியாயங்களையும் புரிந்த , எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்.
உரிமைகள் தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை . நாங்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் தமிழ்நாடு முதல்வர் எங்களை அழைத்துப் பேசாததும் , கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும் எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
இரண்டரை ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இனிமேலும் பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கீழ்க்கண்ட ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்ததுள்ளது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறாம்.
JACTTOGEO Letter : Click Here
No comments:
Post a Comment