பிரதமர் நிகழ்ச்சி பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/01/2024

பிரதமர் நிகழ்ச்சி பள்ளிகளில் ஒளிபரப்ப உத்தரவு

 சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்ட மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு பயமின்றி, மன தைரியத்துடன் தேர்வு எழுத, மத்திய, மாநில கல்வி துறைகளின் சார்பில், உளவியல் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.மத்திய கல்வித்துறை சார்பில், வரும் 29ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 புதுடில்லியில் நடக்கும் இந்த நிகழ்ச்சி, நாடு முழுதும் சமூக வலைதளங்கள் வழியாக, நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த நேரலையை அனைத்து பள்ளிகளிலும் திரை வைத்து ஒளிபரப்பி, மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459