மத்திய பல்கலை.களில் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ )ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 26-ல் தொடங்கி ஜனவரி 24-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்
No comments:
Post a Comment