தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலர் அஜேந்தர் சிங், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநர்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு தகுதி மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment