"ஆசிரியர் கேடயம்" என்ற இதழ் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட் இது.
இது வெறும் எண்களும், எழுத்துக்களும் கொண்ட பட்டியல் அல்ல.
மக்கள் மீது ஆசிரியர் இயக்கம் கொண்டுள்ள அக்கறை, உயிரோட்டமுள்ள உறவும் அதில் உள்ளடங்கி இருக்கிறது. அந்த உணர்வு பொருள்களுக்கும், அதன் பண மதிப்பிற்கும் அப்பாற்பட்டது.
70 லட்ச ரூபாய் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியால் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் 34 கிராமங்களில் 4877 இல்லங்களுக்கு ஆசிரியர்களின் காலத்தால் மாணப்பெரிய உதவி.
மொத்த உதவிகள் 80 லட்சத்தை கடந்து விட்டதாக தகவல்.
ஆசிரியர்களிடம் சங்கம் வேண்டுகோள் விடுத்தவுடன் உதவிகள் குவிந்துள்ளன. மக்கள் துயருறும் போது அவர்களின் கேடயமாக ஆசிரிய இயக்கம் திகழும் என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார்கள். அதே நேரத்தில் மக்களின் மீது, மாணவர் எதிர்காலம் மீது, கல்வி வளர்ச்சி மீது அக்கறையோடு செயல்படுவார்கள். இரண்டு கடமைகளும் வெவ்வேறானவை அல்ல. சமூகப் பொருளியல் நீதிக்கான பயணத்தில் கை கோர்க்க வேண்டிய மக்களின் கூடல் அது.
மிகச் சிறந்த முன்னுதாரணத்தை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி படைத்துள்ளது.
தமிழ்நாடு உழைப்பாளி மக்கள் என்றென்றும் இந்த அன்பை, ஆதரவை நினைவில் கொள்வார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0xUQ83JCzMLjLxuWYAaVVUMAmARJUADXCmfbfeePxRAHaPXAF2UB8FmPmisKdA7wTl&id=100002452833610&mibextid=Nif5oz
க.சுவாமிநாதன்
No comments:
Post a Comment