மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி உயர்வு – புத்தாண்டு பரிசு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/01/2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி உயர்வு – புத்தாண்டு பரிசு!

 .com/


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அடுத்த கட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


அகவிலைப்படி உயர்வு;

மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வு நான்கு சதவீதம் அறிவிக்கப்பட்டு தற்போது மொத்தம் 46 சதவீதமாக அகவிலைப்படியை மத்திய அரசின் ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். 2024 ஆம் ஆண்டுக்கான அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். தற்போது கடந்த மாதங்களுக்கான ஏ ஐ சி பி ஐ குறியீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான தவணை அகவிலைபடியானது நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 50 சதவீத அகவிலைப்படையை மத்திய அரசின் ஊழியர்கள் பெற வாய்ப்புகள் உள்ளது.


அகவிலைப்படி ஆனது 50 சதவீதத்தை எட்டும் போது புதிய ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் பிறகு புதிதாக எட்டாவது ஊதிய குழு அமைக்கப்பட்டு அதன்படி ஊழியர்கள் சம்பளம் மற்றும் அகவிலைப்படி பெறுவார்கள். அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் தொடர்புடையது என்பதால் கூடுதலான அடிப்படை சம்பளத்தை பெற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459