சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் 08.01.2024 முதல் 10.01.2024 வரை. ( நிதி ஒதுக்கீடு - தொடக்க பள்ளிகளுக்கு ரூபாய் 1000/ வீதம்) வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில் 08.01.2024 முதல் 10.01.2024 வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்திலிருந்து இவ்வலுவலகத்திற்கு மன்றச் செயல்பாடுகளுக்கான செலவினங்கள் மேற்கொள்வதற்காக ரூ .4,86,49,400 / - ( ரூபாய் நான்கு கோடியே எண்பத்தாறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து நானூறு மட்டும் ) இவ்வலுவலக வங்கி கணக்கு எண் .142301000001289 - ல் 31.03.2023 அன்று வரவு வைக்கப்பட்டது.
மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் கடிதத்தில் அனைத்து மாவட்ட அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கும் சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகளுக்கு கூடுதலாக பயன்படுத்தி கொள்ள ரூ .243,50,000 / - ( ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தி மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும் ) கீழ்கண்டவாறு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment