Sup Inspector of police:காவல் உதவி ஆய்வாளர் பதவி: 18ல் மாதிரி நேர்முகத் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2023

Sup Inspector of police:காவல் உதவி ஆய்வாளர் பதவி: 18ல் மாதிரி நேர்முகத் தேர்வு

 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான உடற்தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தயாராக ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும், 18ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 10:30 மணிக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே விண்ணப்பித்த படிவத்துடன் மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கேற்று, தயார்படுத்திக் கொள்ளலாம்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

 கலந்துகொள்ள விரும்புவோர், 0422 - 2642 388, 93615 76081 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய கொள்ளலாம். கோவை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459