SSC - 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2023

SSC - 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

 


ssc.jpg?w=400&dpr=3

2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

ssc.jpg?w=400&dpr=3

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  தேர்வு செய்து வருகிறது.


அதன்படி, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level Examination, முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு  செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை பொறியாளர் (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)  தேர்வு முதல் தாள் (CBE) அடுத்தாண்டு மே - ஜூன் மாதத்தில் நடைபெறும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459