தமிழக காவல்துறையில் உள்ளதொழில்நுட்ப பிரிவில் 154உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 2001-ல் நடந்த தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்டம்,பணி விதிகள், கணிப்பொறி தொடர்பான பயிற்சிகள், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு இதன் மீதான தேர்வில்பெற்ற மதிப்பெண்படி உதவிஆய்வாளர்களுக்கான பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்தநீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வு, இருதேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து இரு மாதங்களில் வெளியிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment