School Morning prayer activities 13.12.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/12/2023

School Morning prayer activities 13.12.2023


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்:319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

விளக்கம்:

 அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.


பழமொழி :

Humility often gains more than pride

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.\n\n"}" style="color: black; font-family: Arial;">இரண்டொழுக்க பண்புகள் :1

.1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .


பொன்மொழி :

மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் அமர்ந்திரு; இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட – இங்கிலாந்து

பொது அறிவு :

2,"2":"பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை\n\nவிடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்\n\nஇந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல் யார்?\n\nவிடை: சாம் மானேக்சா (Jamshedji Manekshaw)\n\n"}" face="-apple-system, Arial" style="font-size: medium;">1. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை

விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்


2. இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல் யார்?

விடை: சாம் மானேக்சா (Jamshedji Manekshaw)

English words & meanings :

 modesty (n)- state of being modest நிதானம். moisture (n)- dampness ஈரம்

ஆரோக்ய வாழ்வு : 

ஆவாரம் பூ : உலர் ஆவாரம்பூவை பொடித்து செய்யப்படும் பானம் மிகவும் சிறந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் இந்த பானத்தை இப்படி தயாரித்து கொடுக்கலாம்

டிசம்பர் 13

நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 181932 - டிசம்பர் 131987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார் .இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" 

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

எனும் நூல் 
தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

நீதிக்கதை

 The Flies & the Honey – ஈக்களும் தேனும்

  ஒரு வீட்டுல ஒரு பெரிய தேன் பாட்டில் இருந்துச்சு. அதுல இருந்து கொஞ்சம் தேன் கீழ சிந்திடுச்சு. பக்கத்துல இருந்த ஈக்கள் எல்லாம் அதுல போயி மொச்சிச்சுங்க.

தேன் மேல அமர்ந்ததும் அதுங்களோட இறக்கை எல்லாம் தேனுல ஒட்டிகிடுச்சு. அதுங்களால தேன்ல இருந்து விடுபட முடியல. எவ்வளவு முயற்சி செஞ்சும் தேன்ல இருந்து வெளியவர முடியாத ஈக்கள் அதுலேயே கிடந்து செத்துப்போச்சுங்க. இனிப்பான தேனிற்கு ஆசைப்பட்ட ஈக்கள் வீனா செத்துப்போச்சுங்க.

நீதி : சிற்றின்பத்தில் கவனம் வைக்க கூடாது.

 இன்றைய செய்திகள்

13.12.2023

*3449 தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
*

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்.

*வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு.

*தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு.

*சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இம்மாதம் 15 - 21 ஆம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Today's Headlines

* Incentives for 3449 sanitation workers;  given by Chief Minister M. K. Stalin.

 Donald Trump is leading the race for the Republican presidential nomination.

 *In person inspection by Central Committee in flood affected areas.

 *  Electric train traffic in Tambaram-Chennai beach route is affected.

 *Chennai Grand Master Chess Championship: The Tamil Nadu government has announced that it will be held from 15th to 21st of this month at Chennai Leela Palace.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459