பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.12.2023
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
விளக்கம்:
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
Love thy neighbour as thyself.
உன்னைப் போலவே பிறரை நேசி.
இரண்டொழுக்க பண்புகள் :1
.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்
பொன்மொழி :
ஒரு முட்டாள்
தன் நண்பர்களை
பயன்படுத்துவதை விட
ஒரு அறிவாளி தன்
எதிரிகளை நன்றாக
பயன்படுத்திக் கொள்வான்
விடை: நீலாம்பரி
2.பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?
விடை: முகமது ஜின்னா
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இலுப்பை பூ :இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும்.
டிசம்பர் 18
ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.
நா.பார்த்தசாரதி அவர்களின் பிறந்தநாள்
நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்
நீதிக்கதை
காகமும் அன்னபறவையும்
ஒரு கடற்கரையில் கோவிந்தன் என்பவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் வசதி வாய்ந்தவன், அவனிடம் ஒரு காகம் இருந்தது. தினமும் அவன் அந்த காகத்திற்கு நிறைய உணவு கொடுப்பான். அவன் கொடுத்த உணவை உண்டு அந்த காகம் மிகவும் பருத்தது.
அந்த காகம் மிகவும் அகங்காரம் பிடித்தது. அது எப்பவுமே எல்லோரிடமும் கர்வமாக பேசிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் அந்த கடற்கரையில் சில அன்னப்பறவைகள் நிற்பதை பார்த்த காகம், அந்த அன்ன பறவைகளிடம் சென்று சொன்னது, "நீங்கள் பார்ப்பதற்கு தான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் என்னைப்போல் உங்களால் பறக்க முடியாது"
என்று கர்வமாக சொன்னது.
அப்போது ஒரு அன்னப்பறவை சொன்னது, "நண்பா! நாங்கள் இங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க தான் வந்துள்ளோம், உன்னுடன் எந்த வாக்குவாதமும் செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை" என்றது. உடனே அந்த காகம்,
TEACHERS NEWS |
அதற்கு ஒரு அன்னப்பறவை சரி என்ன போட்டி என்று கேட்டது. அதற்கு காகம் சொன்னது, "நாம் இருவரும் இந்த கடற்கரையில் இருந்து சில மைல்கள் பறந்து செல்வோம், யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் தான் சிறந்தவர்கள்" என்று சொன்னது. உடனே அந்த அன்னப்பறவையும் சரி என்றது. இந்த காகம் தான் பருத்து இருப்பதை மறந்து விட்டு மிகவும் வேகமாக பறந்து சென்றது. அன்னப்பறவையும் அதனால் முடிந்த அளவிற்கு வேகமாக பறந்து சென்று கொண்டு இருந்தது.
சிறிது தூரம் சென்ற பிறகு காகம் மிகவும் சோர்வடைந்தது. அதனால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. கீழே சென்றால் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று அதற்கு நன்றாகவே தெரியும். காகம் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் களைப்பாக பறந்து கொண்டே இருந்தது.அதை பார்த்த அன்ன பறவை, "நண்பா, நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உனக்கு என்ன ஆயிற்று மிகவும் களைப்படைந்து விட்டாயே" என்றது. அதற்கு காகம் சொன்னது, "என்னால் முடியவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றால் நான் நிச்சயமாக இந்த கடலில் விழுந்து இறந்து விடுவேன்" என்றது.
உடனே அன்னப்பறவை, "சரி நீ கவலை படாதே. என் முதுகில் ஏறிக்கொள். நான் உன்னை கரையில் கொண்டு சேர்க்கிறேன்" என்றது. உடனே காகமும் அன்னப்பறவை முதுகில் ஏறி கரைக்கு பத்திரமாக சென்றது. கரைக்கு சென்ற காகம் அன்னப்பறவையிடம் "நண்பா என்னை மன்னித்துவிடு நான் மிகவும் அகங்காரம் பிடித்து உன்னிடம் பேசி விட்டேன், நான் அவ்வாறு உன்னிடம் பேசி இருக்கக் கூடாது. நீ மட்டும் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக இன்று இறந்து இருப்பேன்" என்று அன்னப்பறவையிடம் மன்னிப்பு கேட்டது.
நீதி: கர்வம் என்றைக்கும் உதவி செய்யாது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment