நேற்று ( 08.12.2023 ) தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் SCERT இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட காணொலி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்.
1.) தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள்களை அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பிரிண்ட் எடுக்க வேண்டும். தனியார் பிரவுசிங் சென்டரில் எடுக்க கூடாது
2 ) 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark வினாத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
3.)மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை
வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது.
4,) 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5.) வினாதாட்கள் பதிவிறகத்தில் ஏதேனும் இடர்பாடு இருப்பின் என்ற 14417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
6.) மேற்கண்ட விபரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட தலைமையாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகள் வழங்கி எவ்வித புகார் இடமின்றி தேர்வு சிறப்பான முறையில் நடத்திட அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர் (தொ.க)
திண்டுக்கல்
No comments:
Post a Comment