எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/12/2023

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings

 தொடர்மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் விடுப்பு வழங்கப்பட்டதால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சியினைத் தவிர்த்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளின் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டகங்களை வகுப்பறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 மேலும் , ஆசிரியர் கையேட்டில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டில் ( QR Code ) கட்டகத்திற்காகப் பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொலிகள் ( Videos scribes ) மற்றும் வகுப்பறைச் செயல்பாட்டுக் காணொலிகளைப் ( Classroom demo videos ) பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகக் கையாள அறிவுறுத்துமாறும் , மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துகளை மின் பாடப்பொருளாக kalvi TV official Youtube channel- லில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகச் செயல்படுத்திட


அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்க அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டினைப் பயன்படுத்தி வகுப்பறைச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் -சார்பு SCERT Proceedings 

EE Circular -SCERT Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459