ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/12/2023

ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings

 

ஆசிரியர்கள் / பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

IMG_20231223_083337

ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு சில தலைமை ஆசிரியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவதில்லை என தெரிவித்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டு பார்வையில் காணும் சங்க செயலரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது .


கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு தலைமையாசிரியர்கள் இசைவு பெற்று இணைந்துள்ளனர் . ஆகவே விதிகளின்படி சிக்கன நாணய சங்க கடன் பெறுவது தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

TEACHERS NEWS


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459