உதவித்தொகைக்கு பிரத்யேக இணையதளம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/12/2023

உதவித்தொகைக்கு பிரத்யேக இணையதளம்!

 61700_20231229111059

தமிழ்நாடு முழுதிலும் உள்ள மாணவர்களின் உதவித்தொகை விண்ணப்பங்களை விரைவாகவும், திறம்படவும் பரிசீலிக்க உதவும் இந்த இணையதளம், வெளிப்படைத்தன்மையுடன் எளிதாகவும், நேரடியாகவும் மாணவர்களின் கணக்கில் நிதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்கான பொதுவான தொழில்நுட்ப வசதியை வழங்குதல் போன்ற முக்கிய பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

பயன்கள்

அனைத்து உதவித்தொகை தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்* அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஒரே ஒருங்கிணைந்த விண்ணப்பம்* ஒரு மாணவர் தகுதியுள்ள திட்டங்களை கணினியே பரிந்துரைக்கிறது அகில இந்திய அளவில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் படிப்புகளுக்கான தகவல்களை வழங்குகிறது உதவித்தொகை விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், கண்காணிக்க வசதியாக விரிவான எம்.ஐ.எஸ்., அமைப்பை கொண்டுள்ளது.


உதவித்தொகை திட்டங்கள்:

மத்திய அரசின் துறை மற்றும் அமைச்சகம் வாரியாக உதவித்தொகை திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமரின் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, யு.ஜி.சி.,/ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை திட்டங்கள், மாநில அரசுகளின் உதவித்தொகை திட்டங்கள் என ஏராளமானவற்றிற்கு இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக், மீன்ஸ்-கம்-மெரிட் போன்ற பிரபலமான உதவித்தொகை திட்டங்களில் பயன்பெறவும் இந்த இணையதளம் உதவிகிறது.


விண்ணப்பிக்கும் முறை: 

இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களை அளித்து, ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கான கணக்கை இலவசமாக துவங்கலாம். அதனை தொடர்ந்து, தகுதியுள்ள உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

தற்போது பிரதமரின் உதவித்தொகை, மீன்ஸ்-கம்-மெரிட் உட்பட சில முக்கிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31


விபரங்களுக்கு: https://scholarships.gov.in/


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459