ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான நேர்காணல் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 1ம் தேதி வெளியிட்டது.இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படித்த இளைஞர்கள் பலர் இருக்க, ஓய்வு பெற்றோருக்கு வாய்ப்பு அளிப்பதா என கேள்வி எழுப்பின.
இதற்கிடையில் விண்ணப்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான
நேர்காணல் மாகி பிராந்தியத்தில் வரும் 7ம் தேதியும், மறுநாள் 8ம் தேதி புதுச்சேரி பள்ளி கல்வித் துறை வளாகத்திலும், காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
ALL GOVT ORDERS & PROCEEDINGS
விருப்ப ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அசல் உத்தரவு ஆணை, சான்றிதழ்கள், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும். நேர்காணல் தேர்வில் கலந்து கொள்வதற்கு பயணப்படி எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
No comments:
Post a Comment