மாணவர்களின் சாலை மறியல்: பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/12/2023

மாணவர்களின் சாலை மறியல்: பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை

 


கோவை: ஆலாந்துறை பள்ளியில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு யார் காரணம் என்ற கோணத்தில், ஆசிரியர்களிடம் துறை ரீதியான விளக்கம் பெறப்பட்டுள்ளது.


ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 821 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி ஆசிரியர் ஆனந்தகுமார் சமீபத்தில், போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார். இவரை விடுவிக்க கோரி, கடந்த 7ம் தேதி, அனைத்து மாணவர்களும், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர் ஆனந்தகுமாரை விடுவிக்க கோரி, அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை, மாணவர்கள் கைகளில் வைத்திருந்ததால், திட்டமிட்டு சாலை மறியல் செய்தது தெரியவந்தது.தேர்வு நேரத்தில், பள்ளி ஆசிரியர்களே ஒரு போக்சோ குற்றவாளிக்கு ஆதரவாக, மாணவர்களை துாண்டி விட்டு சாலை மறியலில் ஈடுபடுத்தியது வெட்டவெளிச்சமானது.இது குறித்து, நமது நாளிதழில், என்ன தைரியம் பாருங்க என்ற தலைப்பில் செய்தி வெளியானது.இதையடுத்து, 


இது குறித்து விசாரிக்க, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், அனைத்து ஆசிரியர்களிடமும் விளக்க கடிதம் பெறப்பட்டுள்ளது.இதோடு, முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும், அடுத்தடுத்து பள்ளியில் நடக்கும் பிரச்னை தொடர்பாகவும், அதற்கான தீர்வு வலியுறுத்தியும், எழுத்துப்பூர்வ விளக்கம், முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கார்த்திகேயனிடம் கேட்டபோது, டி.இ.ஓ., தலைமையில் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வ விளக்கம் பெறப்பட்டுள்ளது. இரு ஆசிரியர்கள் விடுப்பில் உள்ளதால் அவர்களிடம் மட்டும், விளக்கம் பெறப்படவில்லை. அரையாண்டு தேர்வு துவங்கவுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதில், கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறோம், என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459