4 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே நாளை(டிச.18) நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை முதலே தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 10 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment