சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் டிச. 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நிகழாண்டுக்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான வருகிற 27-ஆம் தேதி (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான ஜன. 06 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், டிச. 27 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TEACHERS NEWS |
No comments:
Post a Comment