மாநில முன்னுரிமை அரசாணை 243 , தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளும், அரசாணையின் நிறைகளும் குறைகளும்
* அரசாணை எண் 12 ல் Head master / Headmistress of middle Schools - By Promotion from class II and Category 1 of Class III of the Service in Combined Seniority என்ற விதி ரத்து செய்யப்படுகிறது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் Uதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுப்பு முன்னுரிமை Uட்டியல் படி வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது .
* By the Promotion from the Categories in Class Il என்ற புதிய அமெண்ட்மென்ட் படி
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
* பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விதி ரத்து செய்யப்படுகிறது . By Promotion from the eligible Persons in Category 1 of Class III என்ற விதியின் படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் .இடைநிலை ஆசிரியர் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக இனி பதவி உயர்வு பெற முடியாது .
* For the Purpose of appointment Category 1 of Class 1 State Shall be a unit என்ற விதியின் படி வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு மட்டுமே மாநில சீனியாரிட்டி முறையில் நியமனம் , மாறுதல் நடைபெற்றது .
For the Purpose of appointment to any of the Categories in the Service the state Shall be Unit என்ற புதிய அமெண்ட்மன்ட் படி மாநில முன்னுரிமை படியே அனைத்து பதவி உயர்வுகளும் ,மாறுதலும் நடைபெறும் . புதிய விதியின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கு , வேறு மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற முடியும்.
* புதிய அரசாணையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாநில சீனியாரிட்டி வழங்கப்பட காரணம் என்று கூறப்பட்டுள்ளது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பல முரண்பட்ட தீர்ப்புகள் இருந்தாலும் / ஒட்டகம் ஆக்கிரமித்த கதையை / முன்னுதாரணமாக கூரிய தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட முடியாது என்ற விரிவான தீர்ப்பை அரசாணையில் கவனித்தில் கொள்ளப்படவில்லை.
* புதிய விதியில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நகராட்சி பற்றி குறிப்பிடாத நிலையில் State Shall be unit என்பதனால் மற்றவர்களும் பதவி உயர்வு பெற முடியுமா ? மாறுதல் பெற முடியுமா ?
*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்களை நீண்ட காலம் புறக்கணித்ததின் விளைவு புதிய விதி .. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நீதிமன்றத்தை நாடினால் எப்போது செயல்பாட்டிற்கு வரும் ?
மாநில சீனியாரிட்டி முறையின் படி 31.12.2023 அன்றைய தேதியில் யாரையும் பணி இறக்கம் செய்ய கூடாது என்ற விதியின் படி இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இளையவர் , மூத்தவர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை விட அதிக முன்னுரிமை பெறுகிறார்..
TEACHERS NEWS |
No comments:
Post a Comment