கனவு ஆசிரியர் விருது பாராட்டு விழா 19.12.23 அன்று நாமக்கலில் நடைபெறுகிறது
2023-2024ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பான அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் கனவு ஆசிரியர்களை - சிறப்பிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்துதல் சார்பு பார்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், செய்தி வெளியீடு στσστ 408 πåt 01.03.2023 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் சிறப்பான முன்னெடுப்புப் பணிகளின் மூலம் தெரிவுபெற்ற கனவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று படி நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியில் 75% மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக 19.12.2023 அன்று நாமக்கலில் விழா நடைபெறுவதால் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள் (கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும்) கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பில் கண்டுள்ள. ஆசிரியர்களை 18.12.2023 அன்றே அலுவலகப் பணியாக கருதி விடுவிக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறும் சார்ந்த அலுலவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
Kanavu Aasiriyar 2023 Selection list 👇
No comments:
Post a Comment